Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back திரைப்படத்துறை தமிழ் விக்ரம் முதல்முறையாக இரட்டை வேடத்தில்

விக்ரம் முதல்முறையாக இரட்டை வேடத்தில்

விக்ரம் முதல்முறையாக இரட்டை வேடத்தில்

சியான் விக்ரம் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தெய்வமகன் படம் அவரது 48-வது படமாம். இத்தனை படங்களில் நடித்து விட்டாரே தவிர அவர் இதுவரை

இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம்.

நேற்று வந்த ஜீவா உட்பட பல நடிகர்கள் எல்லாம் இரட்டை வேடங்களில் கலக்கி விட்டுச் செல்ல, விக்ரம் மட்டும்   நல்ல கதை கிடைச்சாதான் நடிக்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்ததார்.

இப்போது நல்ல கதை கிடைத்து விட்டதாம் விகரமுக்கு. தற்போது தெய்வமகன் படத்தை முடித்து விட்டு, அடுத்து வெண்ணிலா கபடிக்குழு இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் படத்தில்தான் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

தற்போது தெய்வமகன் படத்தில் விகரமின் மனைவியாக நட்புக்காக சில காட்சிகளில் மட்டும் நடித்துக்கொடுக்கும் அமலா பால் இந்தப்படத்தில் தனி ஹீரோயினாக நடிக்கிறார் என்பதை இயக்குனர் தரப்பில் உறுதி செய்கிறார்கள்.

சியான் இப்போது அமலாவின் தீவிர ரசிகர் ஆகிவிட்டர் என்கிறார்கள். விக்ரம் இரட்டை வேடமென்றால் இன்னொரு கதாநாயகியும் இருக்க வேண்டும் அல்லவா? அவரைப் பற்றி இப்போதைக்கு கவலைபட மாட்டார்கள்!

 


தொடர்புடைய செய்திகள்: