பெண்களுக்குத்தான் பொறுமை அதிகம் என்று நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார். சென்னையில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் சாலை
பாதுகாப்பு வார விழா நிறைவு நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், இந்த நிகழ்ச்சியை இங்கு வைத்தபோது ஏன் பெண்கள் கல்லூரியில் வைக்கிறார்கள் ஆண்கள் கல்லூரியில் வைத்திருக்கலாமே என்று நான் நினைத்தேன். ஆனால் பெண்களுக்குத்தான் பொறுமை அதிகம். அதனால்தான் இந்த நிகழ்ச்சியை இங்கு வைத்திருக்கிறார்கள் என்று நான் பிறகு புரிந்துகொண்டேன்.
இதே ஆண்கள் படிக்கும் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பற்றி பேசியிருந்தால், "ஆமா, வந்துட்டாங்கப்பா" என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் நீங்கள் எவ்வளவு பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதை அப்படியே நீங்கள் ஆண்களிடம் கூறவேண்டும். பெண்கள் பேசும்போதுதான், ஆண்கள் பொறுமையாக இருப்பார்கள். ஒரு தாய் தனது குழந்தைக்கு வீட்டில் இருக்கும் போது பல விஷயங்களை கற்றுத்தருவார், ஆனால் வெளியே போகும் போது அவர் சொல்லித்தரும் முதல் விஷயம் சாலையில் போகும்போது இருபுறமும் பார்த்துவிட்டு பிறகு சாலை கடக்கவேண்டும் என்பதுதான். எனவே சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து விபத்தில்லா சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும், என்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளை நண்பர்கள் என்று கூறிய ஜெயம் ரவி, சகோதரிகள் என்றால் எல்லோரும் கோவித்துக் கொள்வீர்கள், என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.
| < முன் | அடுத்தது > |
|---|




