பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஷால். பாலா படம் என்றாலே படத்தில் நடிக்கும் அனைவரும் ஒருவழி ஆகிவிடுவர் என்று சொல்வார்கள்.
ஆனால் அதற்குரிய பலன் பன்மடங்காக இருக்கும். அதேபோல் இந்தபடம் தனக்கு ஒரு பெரிய கேரியரை ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் விஷால், அதற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடித்துவருகிறார்.
படத்தில் ஒரு காட்சி இப்படி இருந்தால் நல்லாயிருக்கும் என்று டைரக்டர் பாலா திட்டமிட்டு இருந்தார். இதுதொடர்பாக விஷாலிடமும், சண்ட் மாஸ்டரிடமும் கூறியிருக்கிறார். ஆனால் அப்படியொரு காட்சியை பண்ண முடியாது என்று சண்ட் மாஸ்டர்ரே சொல்லிவிட்டார். ஆனால் விஷாலே, சார் அந்த காட்சியை நான் பண்ணுகிறேன், எனக்கு ஒருவாரம் மட்டும் டைம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். விஷாலின் பேச்சை அப்போது பெரிதாக எண்ணவில்லை பாலா.
பிறகு ஒருவாரம் கழித்து பாலா நினைத்தபடியே காட்சியை நடித்து கொடுத்தார் விஷால். அப்படி என்ன காட்சி என்கிறீர்களா? ஒரு மரத்தின் உச்சியில் இருந்து ஓணானை போல தலைகீழாக ஊர்ந்தபடியே கீழே இறங்க வேண்டும் என்பதுதான் அந்தகாட்சி. அதனை விஷால் சொன்னபடியே செய்த கொடுத்தார். விஷாலின் இந்த திறமையை பார்த்து வியந்துபோன பாலா, விஷாலை கட்டிபிடித்து, உண்மையில் நீதாண்டா நடிகன் என்று வெகுவாக பாராட்டியுள்ளார்.
பாலாவின் பாராட்டை பெற்ற விஷால், தனக்கு ஒரு தேசிய விருது கிடைக்க இருப்பதற்கான முன்னோட்டமாக கருதியிருப்பார்.
| < முன் | அடுத்தது > |
|---|




