Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back திரைப்படத்துறை தமிழ் கருணாநிதி திரைத்துறைக்கு ரூ.492 கோடி கடன்

கருணாநிதி திரைத்துறைக்கு ரூ.492 கோடி கடன்

கருணாநிதி திரைத்துறைக்கு ரூ.492 கோடி கடன்

திரைப்படத்துறையை சார்ந்த தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.492 கோடி கடன் வழங்குவத்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதி

கையெழுத்திட்டார். திரைத்துறைக்கு தமிழக அரசு சார்பில் பையனுரில் வழங்கப்பட்ட கலைஞர் நகரில், வீடு கட்டுவதற்காக இந்த கடன் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரைப்பட தொழிலாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு வீடுகள் கட்டுவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் 90 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து 4-1-2010 அன்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். கலைஞர் நகர் எனப் பெயரிடப்பட்ட அந்த நிலப்பரப்பில் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் வாயிலாக 6 நிலைகளில் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

முதல் தொகுதி குறைந்த வருவாய் பிரிவில் ரூ.113 கோடியே 70 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் 3 ஆயிரத்து 804 குடியிருப்புகள், இரண்டாம் தொகுதி குறைந்த வருவாய் பிரிவில் ரூ.175 கோடியே 64 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் 4 ஆயிரத்து 155 குடியிருப்புகள், முதல் தொகுதி மத்திய வருவாய்ப் பிரிவில் ரூ.142 கோடியே 4 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் ஆயிரத்து 172 குடியிருப்புகள், இரண்டாம் தொகுதி மத்திய வருவாய் பிரிவில் ரூ.84 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் 700 குடியிருப்புகள், மூன்றாம் தொகுதி மத்திய வருவாய் பிரிவில் ரூ.33 கோடியே 54 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பீட்டில் 246 குடியிருப்புகள், நான்காம் தொகுதி மத்திய வருவாய் பிரிவில் ரூ.37 கோடியே 93 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் 246 குடியிருப்புகள் இதர செலவுகள் உட்பட மொத்தம் ரூ.674 கோடியே 84 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் 10 ஆயிரத்து 323 குடியிருப்புகளை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி கழகம் (ஹட்கோ), தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்திற்கு ரூ.492 கோடியே 49 லட்சம் கடனுதவி வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியுதவியை பெறுவதற்காக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சுடலைக்கண்ணன் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி கழகத்தின் செயல் இயக்குநர் கே.சுப்பிரமணியன் ஆகியோர் கையெழுத்திட்டனர். அப்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் அசோக் டோங்ரே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கழக நிதி இயக்குநர் டி.பிரபாகரன், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் தலைவர் இராம.நாராயணன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 


தொடர்புடைய செய்திகள்: