Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back திரைப்படத்துறை தமிழ் கமலைக் கண்டிக்கின்றார் கவிஞர் அறிவுமதி

கமலைக் கண்டிக்கின்றார் கவிஞர் அறிவுமதி

கமலைக் கண்டிக்கின்றார் கவிஞர் அறிவுமதி

தமிழ்த்திரைப்ப் பாடலகளில் ஆங்கிலக்கலப்பு செய்யப்ப்படுகிறது என்பதற்காக பாடல்களே எழுதமாட்டேன் என்று பல ஆண்டுகளாக விரதமிருந்தவர் கவிஞர் அறிவுமதி.

தை என்ற பெயரில் கவிதை இதழ் நடத்தி வரும் இவர், தமிழுக்கும், தமிழருக்கும் இன்னல் வந்தால் தாங்கமட்டார். அது கமலஹாசன் என்றாலும் சரி, கருணாநிதி என்றாலும் சரி, துண்டுப் பிரசுரம் எழுதி கிழித்து விடுவார் கிழித்து! கடைசியாக இவரது காட்டமான விமர்சனத்துக்கு சிக்கியவர் பத்திரிகையாளர் ஞானி. தற்போது சிக்கிக் கொண்டிருப்பவர் கலைஞானி.

மன்மதன் அம்பு படத்தில் ஈழத்தமிழர்களை இழிவு படுத்துகிற மாதிரிக் காட்சிகளும், தமிழை இழிவுபடுத்துகிற மாதிரி வசனங்களும், இடம்பெற்றிருந்ததன. குறிப்பாக தமிழ் தெரு பொறுக்கும். தமிழ் இனி மெல்ல சாகும் என்றெல்லாம் கமல் வசனம் என்று எழுதியிருந்ததை சற்று ஆவேசத்தோடு கவனித்தார்கள் தமிழர்கள். இந்த நேரத்தில்தான் தனது முதல் ஆவேசக் குரலை பதிவு செய்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி.

ஈழத் தமிழர்கள் படுகிற இன்னல்கள் போதாதென்று நீங்களும் அவர்களை புண்படுத்த வேண்டுமா என்று அவர் தனது கவிதையில் கமல்ஹாசனை கேட்டிருக்கிறார். இன்னும் சில தமிழார்வ அமைப்புகள் விஷயத்தை சீமான் வசம் கொண்டு சென்றிருக்கிறார்களாம். கமல் விஷயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடந்து கொள்ள முடியாத சீமான், தனது கட்சி தோழர்களுடன் இது குறித்து விவாதித்து வருகிறார் என்கிறார்கள். விவகாரம் பெரிதாக வெடித்தால் கமல் மீண்டும் மன்னிப்புக்கேட்டு கடிதம் எழுதுவார்! வேறென்ன நடந்து விடப்போகிறது!

 


தொடர்புடைய செய்திகள்: