சுவிட்சர்லாந்தின் முன்னணி தொழிலதிபர் பிரான்கோ வைஸ் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரான்கோ தனது 81ஆவது வயதில்
உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இளம் முயற்சியான்மையாளர்களை பிரான்கோ தொடர்ச்சியாக ஊக்கப்படுத்தி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குரோஷியாவில் பிறந்த பிரான்கோ சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்து சுவிஸ் பிரஜையாகவே வாழந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
சூரிச் தொழில்நுட்பக் கல்லூரியல் இரசாயன பொறியியல் தொடர்பான முதுகலை மாணி பட்டத்தை பிரான்கோ பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் இளம் ஆய்வாளர்கள் பலருக்கு பிரான்கோ களம் அமைத்துக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| < முன் |
|---|




