சிறுவர் பாலியல் சுற்றுலாத்துறைக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்;கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து, ஒஸ்ட்ரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து இந்த விழிப்புணர்வு நடவடிக்ககைகளை ஆரம்பித்துள்ளன.
சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதனை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களும் இளைஞர்களும் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
திட்டமிடப்பட்ட முறையில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக குறித்த நாடுகள் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
| அடுத்தது > |
|---|




