ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயுடன் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் 3 பேர் ரகசியமாக சந்தித்துப்
பேசியுள்ளனர்.
கர்சாயை சந்தித்தவர்களில் தாலிபானின் முன்னாள் ஆளுநர் மவுல்வி அப்துல் கபீரும் ஒருவர். முந்தைய தாலிபான் ஆட்சிக் காலத்தில் இவர் நங்கர்ஹர் மாகாணத்தின் ஆளுநராகவும் துணைப் பிரதமராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மூவரும் தற்போது பாகிஸ்தானில் பெஷாவரில் வசித்து வருகின்றனர்.அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காபூல் அழைத்து வரப்பட்ட இவர்கள் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 2 நாட்கள் தங்க வைக்கப்பட்டனர்.
தாலிபான் தலைவர்கள் சிலர் காபூல் நகருக்கு வந்திருப்பதாக அமெரிக்கா ஏற்கெனவே கூறியிருந்தது. ஆனால், பாதிஸ்தான் இராணுவம் இதுகுறித்து எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
தாலிபான்களுடன் சமரசப் பேச்சு நடத்தி அதன் மூலம் வன்முறைச் சூழலை மாற்ற கர்சாய் முயற்சி மேற்கொண்டுள்ள கர்சாய், இதற்காக 70 பேர் கொண்ட சமரசக் குழு ஒன்றையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| அடுத்தது > |
|---|




