ஈராக் நாட்டைச் சேர்ந்த 150 கிறிஸ்தவர்களுக்கு பிரான்ஸ் அடைக்கலம் அளித்துள்ளது.
இத்தகவலை பிரான்ஸ் குடியேற்றத்துறை அமைச்சர் எரிக் பெஸன் இன்று தெரிவித்தார்.
பிரான்ஸில் தற்போது அகதிகளாக அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர், ஓரிரு நாட்களுக்கு முன் பாக்தாத் தேவாலயத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் காயமடைந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
பிரான்ஸில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இதுவரை 1300 ஈராக் கிறிஸ்தவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| < முன் | அடுத்தது > |
|---|




