Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back உலகம் ஆசியா இந்தியாவின் வளர்ச்சி சீனாவுக்கு அச்சுறுத்தல் அல்ல - ஷோ.யோங்கங்

இந்தியாவின் வளர்ச்சி சீனாவுக்கு அச்சுறுத்தல் அல்ல - ஷோ.யோங்கங்

இந்தியாவின் வளர்ச்சி சீனாவுக்கு அச்சுறுத்தல் அல்ல - ஷோ.யோங்கங்

இந்தியாவின் வளர்ச்சி சீனாவுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஷோ யோங்கங்

தெரிவித்தார்.

இந்தியா - சீனா இடையிலான உறவு குறித்து காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:

இந்தியா - சீனா நாடுகளிடையிலான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். இந்தியாவின் வளர்ச்சி சீனாவுக்கு அச்சுறுத்தலாக இருக்காது. மாறாக இது ஒரு வாய்ப்பாகத்தானிருக்கும்.

சர்வதேச அளவில் ஸ்திரமான சூழல் உருவாக இரு நாடுகளும் பாடுபடுகின்றன. இரு நாடுகளுமே சுதந்திரமாக செயல்படும் தன்மை கொண்டவை. இவை இணைந்து நீண்ட கால அடிப்படையில் ஸ்திரமான வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்.

எதிர்கால வளர்ச்சிக்கு திட்டமிட்டு அதற்குரிய செயல்களை மேற்கொள்ள வேண்டும். இதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். இதன் மூலம் சமாதானமான உலகை உருவாக்க முடியும்.

இந்தியாவுடன் சமாதானமான உறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே சீன அரசின் பிரதான கொள்கையாகும். பரஸ்பரம் நம்பிக்கை வைத்து பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கூட்டாக மேம்பாடு காண வேண்டும்.

இரு நாடுகளிடையிலான முரண்பட்ட விவகாரங்களில், இரு நாடுகளும் பரஸ்பரம் மதிப்பும் மரியாதையும் வைத்து ஆலோனை நடத்தி, விட்டுக் கொடுத்து, புரிதலோடு செயல்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்காக ஒட்டுமொத்த உறவையும் பாதிக்கும் வகையில் செயல்படுவது இரு நாடுகளுக்குமே நல்லதல்ல என்றார்.

 


தொடர்புடைய செய்திகள்: