"Heart2Heart" என்ற மனிதநேய நடை பயணத்தினை பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள்
மேற்கொள்ளுகின்றனர். பேர்மிங்ஹாம் நகரில் இருந்து லண்டன்வரை 117 மைல்கள் இடம்பெறவுள்ள இந்த மனிதநேய நடை பயணம் 6 நாட்களுக்கு தொடரும் என நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணிக்கு பேர்மிங்ஹாம் நகரில் இருந்து ஆரம்பிக்கும் இந்தப் பயணம் பல்வேறு நகரங்கள் ஊடாக நகர்ந்து லண்டனை வந்தடையவுள்ளது.
இதற்கு முன்னோடியாக வோர்சொப் (Worksop) பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வைபவ ரீதியான ஆரம்ப நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் மான் (John Mann), நகரசபை உறுப்பினர்களான கெவின் கிறேவ்ஸ் (Kevin Greaves), சிபில் பீல்டிங் (Sybil Fielding), அலன் றோட்ஸ் (Alan Rhodes), Help for Heroes என்ற அமைப்பின் அதிகாரி மேஜர் டோனி ஈரன் (Major Dony Eaton) மேலும் சில அதிகாரிகள், மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகளுடன், தமிழர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Memorial Avenue என்ற இடத்தில் இருந்து தேவாலய அடிகளாரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களான ஜோர்ஜ் நிக்சன், லோகேஸ்வரன், எஸ்.கந்தா, எஸ்.சுதா, எஸ்.சிறீரஞ்சன் உட்பட தமிழர்கள் சிலர் சம்பிரதாயபூர்வ நடை பயணத்தை இன்று ஆரம்பித்தனர். இந்த நடை பயணம் நொட்டிங்ஹாம் நகரசபைவரை (Nottingham County Council) இடம்பெற்றது.
நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பிக்கும் மனிதநேய நடை பயணத்தில் ஜொஹானஸ், நிமலன், மொறிஸ், லோகேஸ்வரன், சிறீரஞ்சன், மற்றும் சுதா ஆகியோருடன் மேலும் சில தமிழர்கள் இணைந்து நடக்கவுள்ளனர்.
பிரித்தானியப் போர் வீரர்களின் நிதியம், மற்றும் இலங்கையில் உள்ள பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கான உதவி என்பவற்றுக்கு நிதி திரட்டும் வகையில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு முதற்கட்டமாக வோர்சொப் (Worksop) நகரசபையினால் 500 பவுண்ஸ் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்த நடை பயணக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரித்தானியத் தமிழர்களாகிய நாங்கள், பிரித்தானியப் போர் வீரர்களுக்கான உதவி என்ற நிதியத்திற்கும், தாயகத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் நிதி சேகரிக்கும் வகையில் கார்த்திகை மாதத்தில் (நவம்பர் 2ஆம் நாள்) ""Heart2Heart" என்ற மனிதநேய நடை பயணத்தை பேர்மிங்ஹாமில் இருந்து லண்டன் நோக்கி 117 மைல் தூரத்திற்கு ஆரம்பிக்கின்றோம்.
எங்களில் பலர் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரி இங்கு சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றோம். இந்த சுதந்திரமும், அமைதியான வாழ்வும் தாயகத்திலுள்ள தமிழ் மக்களிற்கு தொடர்ந்தும் மறுக்கப்பட்டே வருகின்றன.
இதனால் எமக்கு அடைக்கலம் கொடுத்த பிரித்தானியாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குறிப்பாக மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க தமது உயிர் கொடுத்த எமது மாவீரர்களுக்கும் நன்றி சொல்லும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
கார்த்திகை மாதம் பிரித்தானியாவில் படை வீரர்களை நினைவில் கொள்ளும் மாதமாக இருப்பதுடன் தமிழர்களுக்கும் இதுவொரு முக்கியமான மாதமாகும். மனிதநேய நடை பயணம் ஆரம்பிக்கும் நவம்பர் 2ஆம் நாள் உயிர் நீத்த அத்தனை பேரையும் ("All Soul's Day") நினைவில் கொள்ளும் முக்கிய நாளாக இருக்கின்றது.
மாவீரர்களுக்கு மதிப்பளிக்கவும், நன்றி தெரிவிக்கவும் இந்த நடை பயணத்தில் பிரித்தானியாவின் ஒவ்வொரு பாகங்களில் இருந்தும் தமிழர்கள் கலந்து கொள்ளும் அதேவேளை, தமது நகரங்களில் நினைவு வணக்கங்களையும் மேற்கொள்ள இருக்கின்றனர்.
அத்துடன், பி.பி;.சி, நொட்டிங்ஹாம் பத்திரிகைள், மற்றும் வானொலிகள் போன்ற பிரித்தானிய ஊடகங்களும் இந்த நிகழ்வு தொடர்பாக கவனம் செலுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. மனிதநேய நடை பயணத்தில் இணைந்து கொள்ள நிகழ்வின் ஏற்பாட்டாளரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
கீழுள்ள முகவரியில் நன்கொடை வழங்கலாம்
ஜொஹானஸ் சண்முகம்
Johannes Shanmugam
"Heart2Heart" Charity Walk
W: www.h2hwalk.org
E: info@h2hwalk.org
T: 07718980443
02.11 (Tuesday) - The Main event (a memorial for the dead) starts at Birmingham, Victoria Square, inaugurated by Lord Mayor at 10 am.
03.11. (Wednesday) - The walk begins at Coventry’s War Memorial Park at 9 am.
04.11 (Thursday) - The walk starts from Daventry war memorial NN11 4BT at 9 am.
05.11 (Friday) - The walk will begin from Milton Keynes new Bradwell war memorial at 9 am.
06.11 (Saturday) - The walk starts from Luton’s Upper George Street war memorial at 9 am.
07.11 (Sunday) - The walk starts from St. Albans’ Park Street war memorial at 9.30am.
| < முன் | அடுத்தது > |
|---|




