தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களைக் கண்டித்து கனடியத் தமிழர் நடாத்தும் கண்டன ஒன்றுகூடல் ஒன்று ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களை காப்பாற்றி விட்டோம், பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று சர்வதேசத்தை ஏமாற்றிவாறு எம் உறவுகள் மீது கொலைவெறித் தாக்குதல்களை சிங்களம் மீண்டும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. முழுமையான பத்திரிகை தணிக்கை மூலம் தனது அட்டூழியங்கள் வெளியில் தெரியாதவாறும் பார்த்துக் கொண்டுள்ளது. கொலை, கடத்தல், பாலியல்வல்லுறவு, காணாமல் போதல் என எம்முறவுகள் செய்வதறியாது திக்கித்து நிற்கின்றனர். தொடரும் அப்பாரிய மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுவந்து எம் உறவுகளுக்கு அரணாவது எமது உடனடிக் கடமை.
கொலைவெறி சிறீலங்கா அரசு மீது சர்வதேச ராஐதந்திர, பொருளாதார அழுத்தம் அதிகரிப்பதே எம் உறவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும். கொலை வெறி சிங்களத்தை அடையாளம் காட்டவும், சர்வதேசத்தின் குறிப்பாக எமது கனடிய அரசின் உடனடித் தலையீட்டை வலியுறுத்தியும் சனவரி; 10ஆம் நாள் திங்கட்கிழமை, முற்பகல் 11 மணிமுதல் மாலை 3 மணிவரை ரோரன்ரோ, நகரில்; அமைந்துள்ள சிறீலங்கா துணைத்தூதரத்திற்கு முன்னர் கண்டன ஒன்றுகூடல் ஒன்று கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம்:30 St. Clair Avenue West (St. Clair & Yonge)
Subway: St. Clair
காலம்: சனவரி 10, திங்கட்கிழமை.
முற்பகல் 11 மணிமுதல் மாலை 3 மணிவரை
பெருமளவில் கலந்து எமது உறவுகளுக்கு மருந்தாக அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை 0018662638622
| < முன் | அடுத்தது > |
|---|




