Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back இலங்கை பதிவுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ நா உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ நா உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ நா உதவி

கிழக்கு மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது.

இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளரான மார்டின் நெசர்கி தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்ட ஆய்வின்படி பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உணவு, உணவல்லாத பொருட்கள், நீர், போன்ற பொருட்கள் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஸ்ரீலங்காவில் உள்ள குழு இலங்கையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ குழுவுடன் இணைந்து பாதிக்கப்பட்ட கிழக்கு வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ஆய்வுகளை நடத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் சில தினங்களுக்கு தேவையான பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படும் என நெசர்கி குறிப்பிட்டுள்ளார்.

உலக உணவு திட்டம், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், உலக சுகாதார ஸ்தாபனம், என்பன தற்போது நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் மனிதாபிமான விவகாரத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவலக தகவலின்படி பாதிக்கப்பட்ட சுமார் 4 லட்சம் மக்களுக்கான 735 மெற்றிக் தொன் உணவு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் நீர் தாங்கிகளையும் அதற்கான குழாய்களையும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கி வருகிறது. இந்தநிலையில் இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த இரண்டு வாரப்பகுதியினுள் கிழக்கு, உட்பட்ட ஏனைய மாவட்டங்களில் 18 பேர் மரணமாகியுள்ளனர். சுமார் 8 லட்சத்து 63 ஆயிரத்து 773 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 


தொடர்புடைய செய்திகள்: