மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் வாழும் கலை அமைப்பினருடன்
இணைந்து சமைத்த உணவுப் பொதிகளை கடந்த நான்கு நாட்களாக வினியோகித்து வருகின்றனர்.
மாவட்டத்தின் பல இடங்களுக்கு உணவுப் பொதிகள் இயந்திரப்படகுகள் மூலம் உணவுப் பொதிகள் வினியோகிக்கப்பட்டும் வருகின்றன.
வாழும் கலை அமைப்பின் இந்தியப் பிரதிநிதிகள் மூவர் மாமாங்கத்திலுள்ள விக்கினேஸ்வரா திருத்தொண்டர் நிலையத்தில் சமைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட தொண்டர்களும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாமாங்கத்திலுள்ள விக்கினேஸ்வரா திருத்தொண்டர் நிலையத்தின் கட்டடத்தில் சமைக்கப்பட்டு மாவட்டத்தின் படுவான்கரை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் உணவுப் பொதிகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு குழந்தைகளுக்கான பால்மா, உணவுப்பொதிகள், பாண்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நேற்றைய தினம் கொத்தியாபுல, முள்ளாமுனை, குறிஞ்சாமுனை கொக்கட்டிச்சோலை, தேத்தாத்தீவு, துறைநீலாவணை, செங்கலடி, கல்முனை, உள்ளிட்ட பகுதிகளுக்கு உணவுப் பொதிகள் வினியோகிக்கப்பட்டன.
நேற்றைய தினமும் படுவான்கரையின் பல்வேறு பகுதிகளுக்கும் உணவுப் பொதிகள் வினியோகிக்கப்படுகின்றன.
தினமும் 5000 உணவுப் பொதிகள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும் பல பிரதேச செயலாளர்கள் பிரிவுகளுக்கு பிரதேச செயலாளர்கள் ஊடாகவும் தாம் உணவுப் பொதிகளை வினியோகிக்கப்பட்டு வருவதாகவும் வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
| < முன் | அடுத்தது > |
|---|




