105 வயதைத் தாண்டிய க.அன்னம்மா என்ற மூதாட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்லடியில் உள்ள தனது பேரனின் வீட்டில் வைத்து இன்று பகல் காலமானார்.
கடந்த வருடம் இடம்பெற்ற முதியோர் தின விழாவில் மட்டக்களப்பபு மாவட்டத்தில் அதிக வயதுடைய மூதாட்டி என்ற பெருமைக்காக பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டவராவார்.
அண்மைய நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையும் அதனால் ஏற்பட்ட கடுமையான குளிருமே இவரின் இறப்புக்கான காரணமாகக் கூறப்படுகின்றது.
இன்று 14.01.2011 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள இந்து மயானத்தில் இவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
| < முன் | அடுத்தது > |
|---|




