Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back இலங்கை நகர்வுகள் மஹிந்தவின் காலம் முடிந்துவிட்டது உள்ளேயும் வெளியேயும் பிரச்சினை :ஜே.வி.பி

மஹிந்தவின் காலம் முடிந்துவிட்டது உள்ளேயும் வெளியேயும் பிரச்சினை :ஜே.வி.பி

மஹிந்தவின் காலம் முடிந்துவிட்டது உள்ளேயும் வெளியேயும் பிரச்சினை :ஜே.வி.பி

மஹிந்த அரசின் வசந்தகாலம் முடிவடைந்துவிட்டது. கட்சிக்கு உள்ளேயும் பிரச்சினை. வெளியேயும் பிரச்சினை. கொலைக் குற்றத்தில் சிறை சென்றவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகள் வாபஸ்

பெறப்படுகின்றன.ஆனால் போரை வெற்றி கொண்ட சரத்பொன்சேகா பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளார். இப்படி ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா நேற்றுத் தெரிவித்தார்.ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை பத்தரமுல்லை, பெலவத்தையிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.ரில்வின் சில்வா தொடர்ந்து கூறியவை வருமாறு:

 

"கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகள் பெருந்தொகையான நிவாரணப் பொருள்களையும் நிதியுதவிகளையும் வழங்கியுள்ளன. ஐ.நாசபையும் நிதியுதவி வழங்கவுள்ளது. இந்த நிவாரணப் பொருள்களும் நிதியும் முறையாக வழங்கப்பட்டனவா என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.நாட்டில் உயர்ந்துவரும் தேங்காய் விலையைக் கட்டுப்படுத்த அரசு அவசர அவசரமாக கேரளத்திலிருந்து ஒரு லட்சம் தேங்காய்களை இறக்குமதி செய்தது. இங்கு தென்னை நோய் பரவிவிடுமென எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அந்தத் தேங்காய்கள் கப்பலில் இருந்து இறக்கப்படவே இல்லை. இப்போது அந்தத் தேங்காய்கள் பழுதாகிவிட்டன. அதைக் கடலில் எறிந்து கடற் சூழலை மாசுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஒரு தேங்காயின் விலை 26ரூபா 50 சதம். இதற்கு விரயமாக்கப்பட்ட நிதியையும் மக்கள்தான் செலுத்த வேண்டும்.யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டி யிடும் ஜே.வி.பி. வேட்பாளர்களைப் போட்டியிலிருந்து விலகும்படி சில சக்திகள் அச்சுறுத் தல்விடுக்கின்றன. முல்லைத் தீவு மாவட்டத்தில் ஜே.வி.பியினரை வேட்பு மனுத்தாக்கல் செய்யவிடாமல் ஒரு குழுவினர் தடுத்தனர். போராட்டத்தின் பின்னரே நாம் அங்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தோம்" என்றார்.


தொடர்புடைய செய்திகள்: