மட்டக்களப்பில் எந்த அனர்த்தத்தையும் எதிர்கொள்ளும் விதத்தில் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் எடுக்கவேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை மட். கல்லடி படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி பொடிபேஸ் பெரேரா தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில்,
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு மாவட்ட தளபதி பிரிகேடியர் மகிந்த முதலிஹே ஆகியோர் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் அவசர நிலைமையின்போது உலங்குவானூர்தியை எந்தவேளையிலும் பயன்படுத்த தாயாராகவிருப்பதாக கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி தெரிவித்ததாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏதாவது அனர்த்தங்கள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு படையினர் எந்தவேளையிலும் தயாராகவிருப்பதாக தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையில் உரிய பககுதிகளுக்கு சென்று கடமையாற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கையெடுக்கப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இன்றை நிலைமை தொடர்பில் எமது செய்தியாளர்ருக்கு கருத்தும் தெரிவிக்கும்போதுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள அமைச்சர் முரளிதரன், தற்போதைய நிலைமையில் அனைத்து அதிகாரிகளும் தமது கடமையினை உணர்ந்து மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
| < முன் | அடுத்தது > |
|---|




