Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back இலங்கை நகர்வுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்களிடம் விசாரணைகள் ஆரம்பம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்களிடம் விசாரணைகள் ஆரம்பம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்களிடம் விசாரணைகள் ஆரம்பம்

தற்போது இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலி சந்தேக நபர்களை விரிவாக விசாரிக்கும் நடவடிக்கைகள்

ஆரம்பித்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஓமந்தை மற்றும் பூஸா ஆகிய இராணுவ முகாம்கள் இரண்டிலும் ஆயிரத்து 500 க்கும் அதிகமான சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு தேவையான சந்தேக நபர்கள் வெளிநாடுகளில் இருப்பதனால் சர்வதேச ரீதியில் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலி சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து, இயக்கத்திற்கு உரித்தான சொத்துக்கள் மற்றும் தொடர்புடையவர்களை இனங்காணக்கூடியதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே அண்மையில் முல்லைத்தீவு வல்லிபுனம் பிரதேசத்தில் மனிதப் புதைகுழியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக தடவியற் சான்று ஆய்வு பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 


தொடர்புடைய செய்திகள்: