கடற்படைக்கு புதிய தளபதியொருவர் நியமிக்கப்படவுள்ள அதே வேளை தற்போதைய தளபதிக்கு தூதுவர் பதவியொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்து வருகின்றது.
கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் டீ.டப். ஏ.எஸ். திசாநாயக்க நியமிக்கப்படவுள்ளார். பெரும்பாலும் அவர் எதிர்வரும் 15ம் திகதி புதிய பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க தற்போதைக்கு அட்மிரல் ஆக பதவியுயர்த்தப்பட்டுள்ளதுடன், கடற்படைத்தளபதி பொறுப்பிலிருந்து ஒன்றரை வருட காலத்தின் பின் ஓய்வுபெறவுள்ளார்.
திசர சமரசிங்க ஓய்வுபெற்ற பின் அவுஸ்திரேலியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
| < முன் | அடுத்தது > |
|---|




