Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back இலங்கை நகர்வுகள் உறவுக்கு கரம் கொடுப்போம் - கனடியத் தமிழர்களிடம் ஒரு அவசர வேண்டுகோள்

உறவுக்கு கரம் கொடுப்போம் - கனடியத் தமிழர்களிடம் ஒரு அவசர வேண்டுகோள்

உறவுக்கு கரம் கொடுப்போம் - கனடியத் தமிழர்களிடம் ஒரு அவசர வேண்டுகோள்

இயற்கையின் அனர்த்தத்தினால் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ள எமது தென் தமிழீழ உறவுகளின் துயர் துடைக்க அள்ளி வழங்குமாறு கனடியத் தமிழர் தேசிய அவை கனடியத் தமிழ்

மக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
என்றுமில்லாதவாறு பெய்துவரும் மழையினால் தென் தமிழீழ மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான உடனடி அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு, சர்வதேச அரசுகளையும், குறிப்பாக எமது கனடிய அரசையும் கனடிய தமிழர் தேசிய அவை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.

அதேவேளை தமிழர் திருநாளாம் தைத்திருநாளில், நிர்கதியாகியுள்ள எமது உறவுகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்கும் வகையிலான நிதிசேகரிப்பொன்றை கனடியத் தமிழர் தேசிய அவை ஆரம்பித்துள்ளது. பெறப்படும் நிதிமூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய உடன் ஆவன செய்ய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கனடிய தமிழர் தேசிய அவை மேலும் தெரிவித்துள்ளது.

கனடியத் தமிழர் தேசிய அவையின் தலைமைப் பணிமனையிலும், தேசிய அவையினால் அறிவிக்கப்படும் இடங்களிலும், உங்கள் அன்பளிப்பை செலுத்தி அதற்கான பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு கனடிய தமிழ் உறவுகள் வேண்டப்படுகின்றனர்.

அதேவேளை உங்கள் பாராளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு மக்களின் வெள்ள அவலநிலையை விளக்கி கனடிய அரசின் அவசர மனிதாபிமான உதவியை உடன் வலியுறுத்துமாறு வேண்டிக் கொள்ளுமாறும் கனடிய தமிழ் உறவுகள் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையை 0018662638622 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது 5310 Finch Ave East, unit 10 (Markham & Finch) என்ற முகவரியில் அமைந்துள்ள தலைமைப்பணிமனையில் நேரடியாகவோ தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

 


தொடர்புடைய செய்திகள்: