இலங்கையை மையப்படுத்திய இந்து சமுத்திர பிராந்திய வல்லரசுக்கான ஆதிக்க போட்டியில், பாகிஸ்தானும் தமது பங்கினை வெளிப்படுத்துகிறது. என்று லங்கா வெப் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் அண்மைக்காலமாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மற்றும் பாதுகாப்பு தொடர்புகள் அதிகரித்துள்ளன.
இதன் அடிப்படையிலேயே அண்மையில் பகிஸ்தானிய ஜனாதிபதி இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
அதன் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பல வர்த்தக மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் எதிர்வரும் 19ம் திகதி பாகிஸ்தானின் இராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வவேய்ஷ் கயானி ஸ்ரீலங்கா வரவுள்ளார்.
இராணுவத் தகவல்களின் படி, அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட முக்கிய பலத் தரப்பினரை சந்தித்து உரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
| < முன் | அடுத்தது > |
|---|




