Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back இலங்கை செய்திகள் தா.தே. கூட்டமைப்பு ஊடாகவே தமிழருக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் - செல்வம் எம்.பி. கோரிக்கை.

தா.தே. கூட்டமைப்பு ஊடாகவே தமிழருக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் - செல்வம் எம்.பி. கோரிக்கை.

தா.தே. கூட்டமைப்பு ஊடாகவே தமிழருக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் - செல்வம் எம்.பி. கோரிக்கை.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே வழங்கப்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தமிழர்களின் குரலாக ஒலித்து வருகின்றது. தீர்வைப் பெறுவதற்காக அரசுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது.

இவ்வாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது கூறினார்.

அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
அவசரகாலச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதால் எமது தமிழ் மக்கள் மிகவும் துன்பத்தை அனு பவிக்கின்றனர். தமிழர்களைத் தொடர்ந்தும் அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே அரசு அவசரகாலச்சட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துகின்றது.இந்த நாட்டில் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். ஜனநாயகம் வேறூன்றி உள்ளது. அபிவிருத்தி இடம்பெறுகின்றது என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு மாதமும் அவசரகாலச்சட்டம் புதுப்பிக்கப்படுகின்றது.

பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்று அரசு கூறுகின்றது. ஏதோவொரு விதத்தில் பயங்கரவாதம் தொடர்கிறது என்றும் கூறுகின்றது. அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்காகவே அரசு இவ்வாறு கூறுகின்றது.இந்த அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் வடக்கு கிழக்கு மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். மீண்டும் கைதுகள் இடம்பெறுகின்றன. மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் படையினரின் நிர்வாகம் இடம்பெறுகின்றது. இந்த அவசரகாலச்சட்டத்தால் வடக்கு, கிழக்கில் அரச நிர்வாகம் செயலிழந்து போயுள்ளது. விதவைகள் தமது பிள்ளைகளை வளர்ப்பதற்காக சோரம்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு இளைஞர்கள் வேறு இடங்களுக்குச் சென்று தொழில்புரிகின்றனர். இந்நிலையில் அவர்கள் சந்தேகத்தில் கைதுசெய்யப்படுகின்றனர்.

வன்னி மாவட்டத்தில் இந்த அவசரகாலச்சட்டம் முப்படையினருக்கும் அமைச்சருக்கும் முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது. அரச அதிகாரிகள் சுயமாக வேலை செய்ய முடியாத நிலைமை உள்ளது. அவ்வாறு வேலை செய்தால் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.மீனவர்களும் கடும் துன்பத்தை அனுபவிக்கின்றனர். பாஸ் நடைமுறையால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாஸ் முறை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
விவசாயிகளின் நிலங்களும், பூர்வீக வாழ் நிலங்களும் அபகரிக்கப்படுகின்றன. தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவது அவசரகாலச்சட்டத்தின் கீழ் சர்வசாதாரண ஒன்றாகிவிட்டது.

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் இவ்வாறான கொடுமைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தட்டிக் கேட்டால் அது நிராகரிக்கப்படுகின்றது. இந்த நாட்டில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் எமது மக்களுக்கும் உண்டு. அவற்றை அனுபவிக்க அரசு இடமளிக்க வேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தமிழர்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்புகின்றது. அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசு பேச்சு நடத்துகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும்.  என்றார்.

 


தொடர்புடைய செய்திகள்: