வடக்கின் துரித மீட்சித்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
இலங்கை அரசினால் இதற்காக சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடமிருந்து வடக்கின் துரித மீட்சித்திட்டச் செலவினத்துக்காக கடன் பெறப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியினை யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 6 திட்டங்களுக்கு அரசு ஒதுக்கியுள்ளது. மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட தெல்லிப்பழை பிரதேசத்தில் தபால் நிலையம், பஸ் நிலையம், சந்தைக் கட்டடம் என்பனவற்றை நிர்மாணிப்பதற்கு 26 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. பருத்தித்துறை நகரசபை கட்டடம் நிர்மாணிப்பதற்கு 42.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலய வகுப்பறை திருத்தங்களுக்காக 8.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடமராட்சி வயலக்கல்விப் பணி மனையின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக 22.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.கீரிமலையில் கமநல கேந்திர நிலையம் அமைப்பதற்காக 9.06 மில்லியன் ரூபா நிதியும், அரியாலை ஜி.ரி.எம்.எஸ். பாடசாலையின் வகுப்பறைக் கட்டடம் அமைப்பதற்காக 8.5 மில்லியன் ரூபா நிதி யும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைகள் அனைத்தும் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
| அடுத்தது > |
|---|




