Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back இலங்கை செய்திகள் இலங்கையில் நடைபென்ற போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசே சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும் - நிருபமா ராவ்

இலங்கையில் நடைபென்ற போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசே சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும் - நிருபமா ராவ்

இலங்கையில் நடைபென்ற போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசே சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும் - நிருபமா ராவ்

ஐ.நா. நிபுணர் குழுவால் வெளியிடப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமது நிலைப்பாடு என்ன என்பதை இலங்கை அரசே சர்வதேசத்துக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் இந்தியா, 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும் இலங்கை  இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றது.

இந்தியாவின் புதுடில்லிக்கு இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து விஜயம் செய்துள்ள பத்திரிகை ஆசிரியர் கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவி யலாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடை பெறவிருக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஏதாவது எடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையைப் பாதுகாக்க இந் தியா முன்வருமா என இலங்கைப் பத் ரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே நிருபமாராவ் இதனைத் தெரிவித்தார்.

புதுடில்லியில், சவுத் புளொக் எனப்படும் வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைதீவுட னான இந்தியாவின் உறவுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.இதில் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர் விஷ்ணுபிரசாத் மற்றும் ஹர்ஷ் சிறிங்லா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் அதன் அண்டை நாடுகளான மாலைதீவு மற்றும் இலங்கையுடனான உறவுகள் முக்கியமானவை. அவற்றுடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்து வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிருபமாராவ் தெரிவித்தார்.

மறைமுக வேலைத்திட்டம் எதனையும் அடிப்படையாகக் கொண்டு இதற்கான செயற்பாடு களை இந்தியா மேற்கொள்ளவில்லை. இலங்கையின் நலன் விரும்பியாகவே இந்தியா இருக்கின்றது என்றும் நிருபமாராவ் மேலும் தெரிவித்தார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடமைப்பு மற்றும் வடபகுதியில் இந்தியா மேற் கொள்ளும் திட்டங்களையும் அவர் அங்கு விளக்கினார்.


தொடர்புடைய செய்திகள்: