அரசின் பணிகள் மக்களின் பேராதரவுடன் வரும் ஆண்டுகளிலும் தொடரும் எனும் நம்பிக்கையோடு தமிழக மக்களுக்கு எனது புத்தாண்டு -
பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ''உலகெங்கும் தமிழ்ச்சமுதாயத்தின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் திருநாள் பொங்கல் நன்னாள்! இந்நாளில் தமிழ்ப்புத்தாண்டுத் திருநாளையும் இணைத்துக் கொண்டாடும் அருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள்! உழுது பயிரிட்டு வளர்த்துப் பாதுகாத்து, அறுவடை செய்து அனைவரும் வயிறார உண்ண உணவு தருபவன் ஏழை விவசாயி! அந்த விவசாயிகளின் வாழ்வு செழித்திட கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் கூடுதல் மழைபொழிந்து இந்த ஆட்சிக்குப் பெருமை சேர்த்துள்ளது இயற்கை!
இயற்கையோடு இணைந்து விவசாயிகள் வளம்பெற 7000 கோடி ரூபாய்க் கடன் தள்ளுபடி! வட்டியில்லாப் பயிர்க்கடன்! பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 50 விழுக்காடு காப்பீட்டுத் தொகை! விவசாயத் தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளுடன் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள்! நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச நிலம்! தலவரி, தலமேல்வரி,
| அடுத்தது > |
|---|




