சிறிலங்க கடற்படையினரால் ஜெகதாபட்டினம் மீனவர் பாண்டியன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட மீனவப் பெண்கள் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர் பாண்டியன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று ஜெகதாபட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை மீனவ பெண்கள் சுமார் 60 பேர் முற்றுகையிடச் சென்றனர்.
இதனைத் தடுத்த காவல் துறையினர், மீனவப் பெண்களை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மீனவப் பெண்களை நீதிமன்றக் காவலில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| < முன் | அடுத்தது > |
|---|




