சத்தியமங்கலம் வனப்பகுதியில் நோய் தாக்கியதால் பெண் யானை பரிதாபமாக இறந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை சேர்ந்தது குத்தியாலுத்தூர் வனம்.
இப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெரியபள்ளம் வனப்பகுதியில் சென்றபோது ஒரு பெண் யானை இறந்துகிடந்ததை கண்டனர். உடனே ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண், சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி சதீஷ், சத்தியமங்கலம் வனஅதிகாரி பத்மா ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறை மருத்துவர் மனோகரனுடன் நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்தனர்.
இது குறித்து மருத்துவர் மனோகரன் கூறுகையில், இறந்த யானைக்கு பதினைந்து வயது இருக்கும் என்றும் நோயின்காரணமாக இறந்துள்ளதாகவும் கூறினார்.
| < முன் | அடுத்தது > |
|---|




