சென்னையில் இருந்து தனியார் பேருந்துகள் மூலம் வெளியூர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொங்கல் திருவிழாவைக் கொண்டாட ஏராளமானோர் இரயில்களிலும், பேருந்துகளிலும் பல்வேறு ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்துகள் மூலம் வெளியூர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், புரோக்கர்கள் நடமாட்டம் உள்ளதாகவும் புகார்கள் வந்தன.
இதையடுத்து திருமங்கலம் காவல் உதவி ஆணையர் தலைமையில் பல்வேறு சிறப்புப் படையினர் நியமிக்கப்பட்டு கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்தில் கண்காணித்து வருகிறார்கள்.
கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீதும், புரோக்கர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
| < முன் | அடுத்தது > |
|---|




