Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back இந்தியா செய்திகள் இந்திய மீனவரைத் தாக்கினால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும் :அமைச்சர் கிருஷ்ணா எச்சரிக்கை

இந்திய மீனவரைத் தாக்கினால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும் :அமைச்சர் கிருஷ்ணா எச்சரிக்கை

இந்திய மீனவரைத் தாக்கினால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும் :அமைச்சர் கிருஷ்ணா எச்சரிக்கை

இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது இரு நாட்டு உறவுகளைப் பாதிக்கும் எனக் கடும் தொனியில் இலங்கையை எச்சரித்திருக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.

மீனவர்களுக்கு எதிராக இலங்கை தனது பலத்தினைப் பயன்படுத்தும் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என்றும் இருதரப்பு உறவுகளைப் பாதிக்காத வகையில் இலங்கை அரசு முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். இவ்வாறு இந்திய மீனவர்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்பாக இந்திய  சிறிலங்கா கூட்டுச் செயற்குழுவின் கூட்டமொன்றை எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் நாளன்று கூட்டுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா வெளிவிவகாரச் செயலளர் நிருபாமா ராவினைக் கோரியிருக்கிறார். "எத்தகைய புறச்சுழல் நிலவு கின்றபோதும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிரான பலப் பிரஜோகம் இடைவிடாது தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வரலாறு. மீனவர்களின் உரிமையினைப் பாதுகாப்பதற்கு இந்திய அரசு முழுமையான உறுதி கொண்டிருக்கிறது'' என அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.இலங்கை அதிகாரிகளுடன் நிரூபமாராவ் மேற்கொண்ட சந்திப்பின் விவரம் தொடர்பாகத் தமிழ்நாட்டு முதல்வர் கருணா நிதிக்கு எடுத்து விளக்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் நேற்றுமுன்தினம் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 

"இதுபோன்ற சம்பவங்கள் பாகிஸ்தானுடனோ அல்லது இந்தியாவினை எல்லையாகக் கொண்ட ஏனைய நாடுகளுடனோ இடம்பெறாத அதே வேளையில் இலங்கையுடன் மட்டும் தமக்கு இதுபோன்ற பிணக்குகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன என இலங்கையின் அதிகாரிகளுக்குச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது'' என்றும் அமைச்சர் தெரிவித்தார்.கொழும்பு தங்களது நிலைப் பாட்டினை மீள ஆராய்வதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை இந்த விவகாரம் எந்த வகையிலும் பாதிக்காத வகையிலான முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியம் என்று இந்திய வெளி விவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: