ஈரோடு மாவட்டத்தில் தற்போது நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் அறுவடை பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாவட்டமாகும். இங்கு வசிக்கும் விவசாயிகள் விவசாயத்தை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்தனர். இந்த நெற்பயிர் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது ஈரோடு மாவட்டத்தில் அறுவடை பணி பாதித்துள்ளது.
விவசாய பணிக்கு வந்துகொண்டிருந்த பெண்கள் தற்போது நூற்பாலைக்கு செல்வதால் விவசாய பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் இயந்திரம் மூலம் நெற்பயிர் அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
நடப்பு ஆண்டில் தமிழகம் முழுவதும் பரவலாக நல்லமழை பெய்து விவசாயம் செழிப்பாக இருப்பதால் இயந்திரத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
| < முன் | அடுத்தது > |
|---|




